யாரையும் ஆதரிக்க போவதில்லை : பிரசாந்த் கிஷோர்

தினமலர்  தினமலர்
யாரையும் ஆதரிக்க போவதில்லை : பிரசாந்த் கிஷோர்

ஐதராபாத்:வரும் 2019-ல் நடைபெற உள்ள பொது தேர்தலில் எந்த ஒரு கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என தேர்தல் வெற்றி வித்தகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012 குஜராத் தேர்தல், 2014 லோக்சபா தேர்தலில் பா.ஜ., ஆதரவாக மோடி உடன் பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர் . இவர் வகுத்து தந்த திட்டத்தின்படி செயல்பட்ட பா.ஜ., குஜராத்திலும் பொது தேர்தலிலும் ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து உ.பி., மாநிலத்திலும் பெரும்பாலான எம்.பி., இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.இதனையடுத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சியினரிடையே புகழ் பெற்றார்.

ஒவ்வொரு மாநிலகட்சிகளும் தங்களின்மாநிலங்களுக்கு வந்து தங்களை வெற்றிபெற செய்யும் படி பிரசாந்த்திற்கு அழைப்பு விடுத்தன. இதனை ஏற்ற பிரசாந்த்கிஷோரும் ஒரு சில மாநிலங்களுக்கு சென்று அம்மாநில கட்சிகள் ஆட்சியை கைப்பற்றும் விதமாக தேர்தல் வியூகம் வகுத்து தந்துள்ளார்.
வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலுடன் ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் எந்த ஒரு கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை