தேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேசதுரோக வழக்கில் நிர்வாகி கைது: சூரத்தில் பஸ்சுக்கு தீவைப்பால் பதட்டம்

சூரத்: சூரத்தில், தேசதுரோக வழக்கில் அமைப்பு ஒன்றின் நிர்வாகி கைது செய்யப்பட்டதால், நகர் பகுதியில் பஸ்சுக்கு மர்ம கும்பல் தீவைத்தது. அதனால், சூரத்தில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் நகர் பகுதியில் நேற்றிரவு கும்பல் ஒன்று, அவ்வழியாக வந்த பஸ்சை வழிமறித்து தீவைத்தது. நகர் பகுதியில் உள்ள பொது சொத்துகளை சேதப்படுத்தியது.

திடீெரன கும்பல் தாக்குதல் நடத்தியதால், மக்கள் அலறியடித்து ஓடினர். சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது, பட்டேல் சமூகத்திற்காக போராட்டம் நடத்தி வரும் ஹர்த்திக் படேலின் நெருங்கிய உதவியாளர் அல்பேஷ் கதிரியா என்பவரை, அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததால் வன்முறை ஏற்பட்டது ெதரியவந்தது.

இவர், படிதார் அனாத் அன்டாலன் சமிதி (பிஏஏஎஸ்) என்ற அமைப்பின் தலைவராவார். படிதார் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர்.



கடந்த 2016 ஆண்டு நடந்த போராட்டத்தில் அல்பேஷ் கதிரியா பேசிய வார்த்தைகள், சமூக நல்லிணக்கத்துக்கும், அரசுக்கு எதிராகவும் பேசப்பட்டதாக கூறி, அவர் மீது ஏற்கனவே தேசதுரோக வழக்கு பதிவு ெசய்யப்பட்டது. அந்த வழக்கில், தற்போது அவரை போலீசார் கைது செய்ததால், சூரத்தில் ஏற்பட்ட வன்முறையில், பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.   இதுகுறித்து, சூரத் போலீஸ் கமிஷனர் சதீஷ் ஷர்மா கூறுைகயில், ‘‘தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.

இரவில் நடந்த வன்முறைக்கு பின்னால் யார் என்பதை உறுதிப்படுத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றார். இதற்கிடையே, ஹர்திக் பட்டேல் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், ‘மக்கள் அமைதி காக்கவும்.

பொது சொத்துக்களை சேதப்படுத்த கூடாது. போலீசார் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

அல்பேஷ் கதிரியாவை கைது ெசய்ததை எதிர்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை