இந்தியாவில் வாழ்வதற்கு தகுந்த மெட்ரோ நகரங்கள் பட்டியலில் சென்னை 2-வது இடம்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் வாழ்வதற்கு தகுந்த மெட்ரோ நகரங்கள் பட்டியலில் சென்னை 2வது இடம்

டெல்லி: இந்தியாவில் வாழ்வதற்கு தகுந்த மெட்ரோ நகரங்கள் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த சுகாராத வசதிகள் உள்ள நகரங்களில் திருச்சியும், சிறந்த குடிநீர் வினியோகம் கொண்ட வசதிகளில் ஈரோடும் முதல் இடம் பெற்றுள்ளது. மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சகம் முதல் முறையாக இப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி 40 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள மெட்ரோ நகரங்கள் பிரிவில் கிரேட்டர் மும்பை முதல் இடத்திலும், சென்னை இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. சூரத் மூன்றாவது இடத்திலும், பெங்களூரு ஆறாவது இடத்திலும், தலைநகர் புதுடெலலி ஏழாவது இடத்திலும் இருக்கின்றன. ஒட்டுமொத்த நகரங்கள் பட்டியலில் மகாராஷ்டா மாநிலம் புனே முதல் இடத்திலும், நவிமும்பை இரண்டாவது இடத்திலும் கிரேட்டர் மும்பை மூன்றாவது இட்ததிலும் இருக்கின்றன. ஆண்மிக நகரமான திருப்பதி நான்காவது இடத்தில் உள்ளது. இப்படியலில் தமிழகத்தில் இருந்து முதல் பத்து இடத்திற்குள் எந்த நகரமும் இடம் பெறவில்லை. திருச்சி பன்னிரண்டாவது இடத்திலும், சென்னை பதினான்காவது இடத்திலும், கோவை இருபத்தைந்தாவது இடத்திலும், ஈரோடு இருபத்தாறாவது இடத்திலும் இருக்கின்றன. சிறந்த சுகாதார வசதிகள் கொண்ட நகரங்கள் கொண்ட பட்டியலில் திருச்சி முதல் இடத்தில் உள்ளது. சிறப்பான குடிநீர் வினியோகம் வசதி உள்ள நகரங்களில் ஈரோடு முதல் இடம் பிடித்துள்ளது. நிர்வாகம், கல்வி, சுகாதாரம், சமுக பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, குடிநீர், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பதினைந்து அமுசங்கள் அடிப்படையில் புள்ளி விவரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை