குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை

புதுடெல்லி : வறட்சி பாதிப்பு பகுதிகளுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார். இந்தியாவின் 17-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடந்தது.

இதில், பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை அமைத்தது. தமிழகத்தை தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்றது.

மோடி தலைமையில் புதிய அரசு அமைத்தது. இதனைதொடர்ந்து 17வது மக்களவையின் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமைதொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாள் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் பதிவியேற்று கொண்டனர். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் தமிழகத்தில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட எம். பி. க் கள் பதவியேற்று கொண்டனர்.

அவர்கள் தாய்மொழியான தமிழில் பதவியேற்றது பெரும் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் மூன்றாம் நாளான நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.

சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்பி ஓம் பிர்லா, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையடுத்து, அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இன்று நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இதற்காக குடியரசு மாளிகையில் இருந்து, பாராளுமன்றத்திற்கு குடியரசு தலைவர் குதிரை படை சூழ 10. 54 மணிக்கு வந்தார். அப்போது, அங்கு துணை ஜனாதிபதி வெங்கையநாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் வரவேற்று கூட்டம் நடைபெறும் அவைக்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுகள்.

பெண்கள் முதல் முறையாக அதிகமாக வாக்களித்துள்ளனர். புதிய இந்தியாவை கட்டமைக்க முயன்று வருகிறோம்.

நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் மருத்துவ மையங்கள் புதியதாக அமைக்கப்பட உள்ளது. ஏழைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவம் கிடைப்பதற்கு அரசு உறுதியளித்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வை முன்னேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காக 13 ஆயிரம் கோடி நிதி வழங்கும் திட்டத்தை அரசு அமல் படுத்தியுள்ளது.

எதிர்கால சந்ததிக்காக தண்ணீரை நாம் சேமிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.

குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை வழங்கப்படும். பழங்குடியினர் நலனும் நமது அரசின் நோக்கமாக உள்ளது.

புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியா முதன்மை வகிக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே அரசின் நோக்கம்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்படும். முத்தலாக் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

நாட்டில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க கோேலா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதில் அரசு மும்முரமாக உள்ளது.

நதிநீர் இணைப்பு திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும். வங்கிச் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளன.

வரி செலுத்துவது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளன. உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது.

சிறு தொழில் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி பெரிதும் உதவுகிறது. நேரடி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு குறைந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தை உயர்த்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு குடியரசு தலைவர் பேசினார்.   

.

மூலக்கதை