கண்டு கொள்ளாத தமிழகம்

தினமலர்  தினமலர்
கண்டு கொள்ளாத தமிழகம்

புதுடில்லி: மத்திய அரசின், செய்தித ஒலிபரப்புத்துறை அமைச்சகம், ஆண்டுதோறும், சிறந்த குறும்படங்களுக்கு விருது வழங்குகிறது.

இந்த குறும்படங்களை, சம்பந்தப்பட்ட மாநில தூர்தர்ஷன் சேனல்களே தயாரித்து, விருதுக்கு அனுப்பும். பிரதமர் மோடி அரசின் திட்டங்கள், எப்படி சென்றடைகிறது என்பதை, இந்த குறும்படங்கள் விவரிக்கும். அதோடு சுற்றுச்சூழல் உட்பட, மக்களை பாதிக்கும் மற்றும் பயன்படக் கூடிய விஷயங்களும் குறும்படங்களாக தயாரிக்கப்படுகின்றன.


இந்த முறை, இந்தியாவின் அனைத்து கேந்திரங்களிலிருந்தும், 70க்கும் ற்பட்ட குறும்படங்கள், விருதுக்காக வந்துள்ளன. ஆனால், தமிழக தூர்தர்ஷனிலிருந்து, ஒரு குறும்படம் கூட வரவில்லை.

'திரைப்பட தயாரிப்பில், தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், அங்கிருந்து ஒரு குறும்படம் கூட வரவில்லையே' என வருத்தப்பட்டிருக்கிறார், செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர்.

மூலக்கதை