சூரத் டுட்டோரியல் சென்டர் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு: வணிக வளாக உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சூரத் டுட்டோரியல் சென்டர் தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு: வணிக வளாக உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு

சூரத்: சூரத் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 23 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 16 பேர் படுகாயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டிடத்தில் இருந்து சிலர் குதித்ததாலும், அவர்களில் சிலர் அதிர்ச்சியில் இறந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.

4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் சார்த்தனா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வந்த டுட்டோரியல் பயிற்சி சென்டரில் நேற்று மாலை தீவிபத்து ஏற்ப்பட்டது.

இந்த விபத்தில் தப்பிக்க பல மாணவர்கள் மாடியிலிருந்து கீழே குதித்தனர். அதில் பலருக்கு காயம் பலமாக ஏற்பட்டு உள்ளது.

மேலும் சிலர் உயிர் இழந்து உள்ளனர். இதுவரை 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.



தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். காயம் அடைந்த 16 பேரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டுட்டோரியல் பயிற்சி சென்டர் நடத்தி வந்த பார்கவா பூட்டானி மற்றும் வணிக வளாகம் உரிமையாளரான ஹர்ஷல் வக்காரியா மற்றும் ஜின்னெஷ் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சூரத் சூரத்தனில் நடைபெற்ற தீ விபத்தை அடுத்து குஜராத் முதல்வர் விஜய் ரூபனி, குஜராத் முழுவதும் செயல்பட்டு டுட்டோரியல் பயிற்சி மையங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தீ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 இலட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை