சபரிமலையில் விஷு கனி தரிசனம்

தினகரன்  தினகரன்
சபரிமலையில் விஷு கனி தரிசனம்

திருவனந்தபுரம்: சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 10ம் தேதி மாலை திறக்கப்பட்டது. இந்நிலையில் சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு கோயிலில் பழம், காய்கறிகள் உள்பட பொருட்கள் ஐயப்பன் முன் வைக்கப்பட்டன. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. நடை திறந்ததும் பக்தர்கள் விஷூ கணி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர், மேல்சாந்தி வாசுதேவன்நம்பூதிரி ஆகியோர் கை நீட்டம் அளித்தனர். கணி காணலையொட்டி சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். வரும் 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு ேகாயில் நடை சாத்தப்படும்.

மூலக்கதை