உத்தரபிரதேச பிரசாரத்தில் விதிமீறல் ஆதித்யநாத், மாயாவதிக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரபிரதேச பிரசாரத்தில் விதிமீறல் ஆதித்யநாத், மாயாவதிக்கு நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

லக்கோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் தீயோபந்த் பகுதியில், பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணி பொதுக்கூட்டத்தில் கடந்த 7ம் தேதி பேசிய மாயாவதி பேசுகையில், ‘‘இங்குள்ள இஸ்லாமியர்களைப் பார்த்து நான் சொல்கிறேன். உங்களது வாக்குகளை சிதறடிக்காதீர்கள்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜவை வீழ்த்த வேண்டும் என்ற நினைத்தால் இந்த மெகா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று பேசினார். இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த 9ம் தேதி பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “எங்களுக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளதாக மாயாவதி பேசியுள்ளார்.



காங்கிரஸ், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணிக்கு அலி மீது நம்பிக்கை இருந்தால் எங்களுக்கு பஜ்ரங் பலி மீது நம்பிக்கை உள்ளது” என்று பேசினார். இவரது பேச்சும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இருந்தது.

இதுதொடர்பாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் சென்றது. அதையடுத்து, ‘அலி என்பது இஸ்லாமியர்களை குறிக்கும் விதமாகவும், அனுமன் பெயரான பஜ்ரங் பலி இந்துக்களை குறிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

இதுதேர்தல் நடத்தை மீறலாக இருப்பதனால் இதுகுறித்து 24 மணி நேரத்தில் பதிலளிக்க வேண்டும்’ என்று, மாயாவதி மற்றும் ஆதித்யநாத் ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

.

மூலக்கதை