ரஷ்யாவில் பங்களா இருக்கு... ஆனா கடன் ரூ33 கோடி இருக்கு...!

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரஷ்யாவில் பங்களா இருக்கு... ஆனா கடன் ரூ33 கோடி இருக்கு...!

* பவன் கல்யாண் ‘அபிடவிட்’டில் பகீர்
ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பீமாவரம் மற்றும் கஜூவாகா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில், கஜூவாகா தொகுதியில் போட்டியிடத் தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவர் தேர்தல் ஆணையத்திடம்  சமர்ப்பித்துள்ள ‘அபிடவிட்’டில் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்ட விசயங்களில், தற்போது 50 வயதான அவர், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

தனது பெயரில் ரூ. 55 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும், அதில் ரூ. 33 கோடி அளவிற்குக் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ரூ. 12 கோடி மதிப்புள்ள நகைகள், வங்கியில் தனது பெயரில் ரூ. 4. 76 லட்சம் ரொக்கம், மனைவி அண்ணா லெஜென்வா பெயரில் ரூ. 1. 53 லட்சம் ரொக்கம், ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் ரூ. 40 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு, ரூ.

5. 70 கோடி மதிப்புள்ள 18 ஏக்கர் விவசாய நிலம், ரூ. 2. 75 கோடி மதிப்பில் 6 சொகுசு கார்கள் உள்ளிட்டவை உள்ளன. இந்த சொத்துக்கள் அனைத்தும் திரைப்படம், விவசாயம் மற்றும் நிதி நிறுவனம் உள்ளிட்டவை மூலமாகச் சம்பாதித்தது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் வங்கிக் கடன், திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் ரூ. 33 கோடி அளவிற்கு கடன் பெற்றுள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு பெற்று கட்சி நடத்தும் பவன் கல்யாண் குறித்து, சமூக வலைதளங்களில் ஆதரவும், கிண்டலும் விமர்சனங்கள் பகிரப்படுகின்றன.

.

மூலக்கதை