யுகாதி ஆஸ்தான திருமஞ்சனம் ஏப்.2ம் தேதி 5 மணிநேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
யுகாதி ஆஸ்தான திருமஞ்சனம் ஏப்.2ம் தேதி 5 மணிநேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி யுகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 3 மணிக்கு சுப்ரபாதம் சேவை தொடங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பின்னர் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி விஸ்வ சேனாதிபதியுடன் ஆனந்த நிலையம், கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக வந்து தங்க கதவு அருகே கொலு வைக்கப்பட உள்ளனர். யுகாதி ஆஸ்தானத்தையொட்டி அன்றைய தினம் ஏழுமலையான் கோயிலில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் யுகாதி ஆஸ்தானத்தையொட்டி முன்னதாக ஏப்ரல் 2ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து மூலவர் சன்னதி முதல் கொடிமரம், ரங்கநாதர் மண்டபம் உட்பட அனைத்து இடங்களும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.ரூ.3.67 உண்டியல் காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 71691  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 26,891 பேர் முடிகாணிக்கை செலுத்தியிருந்தனர். 10 மணிநேரம் காத்திருந்து இலவச தரிசனமும், 4 மணிநேரம் காத்திருந்து திவ்ய மற்றும் ஆதார் அடையாள அட்டை காண்பித்த பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் செலுத்தியிருந்த உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.3.67 காணிக்கை கிடைத்தது

மூலக்கதை