சிறந்த முதல்வர்கள் பட்டியல் வெளியீடு: முதல் இடத்தை பிடித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ்

தினகரன்  தினகரன்
சிறந்த முதல்வர்கள் பட்டியல் வெளியீடு: முதல் இடத்தை பிடித்தார் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ்

ஐதராபாத்: இந்தியாவில் உள்ள சிறந்த முதல்வர்கள் பட்டியலில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகரராவ் முதல் இடத்தை பிடித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதியில் இருந்து 7 கட்டமாக  நடைபெற உள்ள நிலையில் எந்த மாநில முதல்வரின் செயல்பாடு சிறப்பாக இருக்கின்றது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன் வைத்து சி-வோட்டர்ஸ் மற்றும் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி இருந்தது. அந்த கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.இதன்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அனைத்து துறைகளிலும் மிக சிறப்பாக செயல்படுவதாக 79.2 சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக  வாக்காளர்கள் மத்தியில் சந்திரசேகர் ராவ் முதலிடத்தை பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து, இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் 2-வது இடத்திலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.11 வது இடத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிடித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த முறை நடந்த கருத்து கணிப்பில்  முதன்மை இடங்களில் இருந்தார். இந்த முறை அவர் 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடைசி இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை