காங். 6வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழகத்திற்கு இன்று அறிவிப்பு: பாஜவிலும் வெளியிட முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங். 6வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு தமிழகத்திற்கு இன்று அறிவிப்பு: பாஜவிலும் வெளியிட முடிவு

புதுடெல்லி: காங்கிரஸ் வேட்பாளர்களின் 6வது பட்டியல் நேற்றிரவு வெளியான நிலையில், இன்று தமிழகத்திற்கான வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் உள்பட 5ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

நேற்றிரவு 5ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள காங்கிரஸ் கட்சி தற்போது 6ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில், 9 வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கேரளா - ஆழப்புழா - ஷானிமோல் உஸ்மான், கேரளா - அட்டிங்கல் - அடூர் பிரகாஷ், மகாராஷ்டிரா மாநிலம் - நந்தூர்பார் - கே. சி. பாடவி, துலே - குணால் ரோஹிதாஸ் பட்டீல், வார்தா - சாருலதா கஜாசிங், யாவட்மால் வாசிம் - மாணிக்ராவ் தாக்கரே, மும்பை தெற்கு - ஏக்நாத் கெய்க்வாட், சிரிதி - பவுசாஹிப் காம்ப்ளே, ரத்னகிரி - நவின்சந்திரா பண்டிவடேகர் ஆகியோர் பெயர்கள் பட்டியலில் உள்ளன.   இந்நிலையில், ‘இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவைகளில் உள்ள 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ராகுல்காந்தி வெளியிடுவார்’ என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

அதேபோல், இன்று பாஜவும் தமிழகத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை