காங்கிரசோடு இணையவே மாட்டோம்: பீம் ஆர்மி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரசோடு இணையவே மாட்டோம்: பீம் ஆர்மி அறிவிப்பு

உ. பி. யில் தலித் மக்களிடம் செல்வாக்கு பெற்ற கட்சி சந்திரசேகர் ஆசாத் என்ற ராணாவின் தலைமையில் இயங்கும் பீம் ஆர்மி. உ. பி.

கிழக்குப் பகுதி காங்கிரஸ்  பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, ராணாவை கடந்த வாரம் சந்தித்தார். இதையடுத்து காங்கிரசுடன் பீம் ஆர்மி இணைந்து தேர்தலை சந்திக்கும் என பலத்த  எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த சந்திப்பினால் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணிக் கட்சியினர் கலக்கம் அடைந்திருந்தனர். பீம் ஆர்மி பிரமுகர்கள் சிலரும் காங்கிரசுடன் நெருங்குவதை வரவேற்கும் விதமாக பேட்டி அளித்து வந்தனர்.

இந்நிலையில் இப்பிரச்னைக்கு பீம் ஆர்மி கட்சி  இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. காங்கிரசுடன் எந்தக் காலத்திலும் கைகோர்க்க மாட்டோம் என்று பீம் ஆர்மியின் தலைவர் வினய் ரத்தன் சிங் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

‘காங்கிரஸ் தனது 60 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தலித் மக்களுக்கு எதுவும் செய்ததில்லை. மாறாக அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளே  அதிகம் இருந்தன.

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ வளர்வதற்கும் அக் கட்சி வழிவகுத்தது.

காங்கிரசுக்கு நாங்கள் ஆதரவு அளிப்பதற்கு நியாயமான ஒரு காரணம் கூட  இல்லை’ என வினய் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை