உபி.யில் மக்களவை தேர்தலில் பகுஜன்- 38,சமாஜ்வாடி- 37 தொகுதிகளில் போட்டியிட முடிவு: பட்டியலும் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
உபி.யில் மக்களவை தேர்தலில் பகுஜன் 38,சமாஜ்வாடி 37 தொகுதிகளில் போட்டியிட முடிவு: பட்டியலும் அறிவிப்பு

லக்னோ: மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 37 தொகுதிகளில் போட்டியிடும் என இருகட்சி தலைவர்களும் அறிவித்துள்ளனர்.  உத்தர பிரதேசத்தில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் இம்மாநிலத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்திருந்தன. இரு கட்சிகளும் தலா 38 ெதாகுதிகளில் போட்டியிடும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காங்கிரஸ் இந்த கூட்டணியில் இடம்பெறாது என கூறப்பட்டது. இந்நிலையில், இரு கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக அகிலேஷ் யாதவும் மாயாவதியும் முடிவு செய்து நேற்று அறிவித்தனர். அவர்கள் கையெழுத்திட்ட தொகுதி பங்கீடு தொடர்பான அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் 38 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோக்தளம் 3 தொகுதிகளில் ேபாட்டியிடுகிறது. காந்தி குடும்பத்தின் அமேதி மற்றும் ரேபரேலியில் இந்த கூட்டணி போட்டியிடவில்லை. முலாயம் சிங் அதிருப்திசமாஜ்வாடி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 38 இடங்களிலும் போட்டியிடுவது பற்றி, சமாஜ்வாடியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், ‘‘இந்த தொகுதி உடன்பாடு அதிருப்தி அளிக்கிறது. எதன் அடிப்படையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பாதி தொகுதிகளை ஒதுக்கினீர்கள்? நமது கட்சி வலிமையானது. அக்கட்சியால் நான் முதல்வரானேன், பாதுகாப்பு துறை அமைச்சரானேன். விரைவில் மக்களவை தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். இதில், வேட்பாளராக விரும்புபவர்கள் விண்ணப்பத்தை கொடுங்கள். அப்போதுதான் உங்களுக்கு சீட் கிடைக்கும். அகிலேஷ் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். ஆனால், அவரது முடிவை என்னால் மாற்ற முடியும்” என்றார்.

மூலக்கதை