மேஜர் முகுந்த் வரதராஜன் யாருக்காவது நியாபகம் இருக்கிறதா ?

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

2014 காஸ்மீரில் தீவிர வாதிகளின் நேரடி சண்டையில்  உயிர் இழந்தார்.....

அவர் உடல்  தாம்பரம் தனி ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய போது அவர் குடும்ப உறுப்பினர்கள் தவிர  யாரும் முன்னால் நிற்க கூடாது , தமிழக அமைச்சர் உட்பட என்று  இராணுவம் கட்டளை இட்டது...  இராணுவ வீரர்கள்அந்த பூட்ஸ் காலில் தரையில் அடித்து சலுயூட் அடித்த போது நிலமே அதிர்ந்தது... 
அன்று அதை நானும் ஒரு ஓரமாக நின்றுகொண்டு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்.. அப்பிடியே மெய் சிலிர்த்து போனது .. ஒரு மனிதன் சாவும் , மரியாதையும் இப்படி இருக்க வேண்டுமே.. என்று  உணர வைத்த நாள்

முகுந்த் அவர்களின் தந்தை  மட்டுமே மிகவும் வருத்த பட்டார்...  பிராமண குடும்பத்தில் பிறந்துவிட்டு  பேங்க் எக்ஸாம் எழுத சொன்ன இவன் ராணுவத்தில் தான் வேலை செய்வேன் , அதுவும் காஸ்மீரில் தான் வேண்டும் , அதிலும் மேஜர்  (,தளபதி )களத்தில் இறங்கி அடிக்க வேண்டும் என்று எதிரிகளை தும்சம் செய்து விட்டு தானும் இறந்து போனான் , குடும்பம் குழந்தை என்று தவிக்கவிட்டு போய் விட்டதாக அழுதார் ... 

ஆனாலும் அவர்  குட்டி பெண் குழந்தை  பேசிய பேச்சும் தைரியமும் மெய் சிலிர்க்க வைத்தது...  சாவை பார்த்து பய பட கூடாது என்று அவர் தந்தை சொல்லிவிட்டு சென்றதாக  கூறி யது..
அன்றய முதல்வர்  அம்மா குடும்பத்தில் ஒவ்வொருவராக  போன் செய்து விசாரிதார்....

அதற்கு முன் அவர் உடல்  வந்து இறங்கும் போது அந்த  மொத்த  மிலிட்டரி க்கு உட்பட்ட ரோடும் தண்ணீர் ஊற்றி கழுவி பளிங்கு கல்லு போல  செய்து  மேஜர் உடலுக்கு மரியாதை கொடுத்தார்கள் தாம்பரம் இளைஞர்கள்....

அந்த ராணுவ வண்டியில் மேஜர்  முகுந்த் இறுதி மரியாதை இன்றும் கண்ணில் இருக்கிறது...  நாட்டு பற்று என்றால் என்ன ? ஒவ்வொரு வீரரின் தியாகம் என்ன, இப்படி ஒவ்வொரு இந்தியனும்  உணர்ந்தால் போதும்   நாட்டிற்கு துரோகம் செய்யும் எண்ணம் ஒரு நாளும் வராது...போரில் இறக்கும் ஒவ்வொரு  வீரனின் உணர்வு ,இதன் சுகம் எப்படி என்று அனுபவித்து பார்த்தால் போதும்.. தான் பிறந்த பலனை அனுபவித்து விட்டு போகிறோம் என்று  உணர முடியும் ..#ஜெய்ஹிந்!

செந்தில் சின்னசாமி

மூலக்கதை