எல்.ஐ.சியின் 'மைக்ரோ பச்சத்' என்னும் புதிய நுண் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

தினகரன்  தினகரன்
எல்.ஐ.சியின் மைக்ரோ பச்சத் என்னும் புதிய நுண் காப்பீட்டு திட்டம் அறிமுகம்

டெல்லி: எல்.ஐ.சியின் \'மைக்ரோ பச்சத்\' என்னும் புதிய நுண் காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி.-யின், தென் மண்டல அலுவலகத்தில் இந்த திட்டத்தை அதன் மண்டல மேலாளர் அனில் குமார் அறிமுகப்படுத்தினார். நுண் காப்பீட்டுத் திட்டங்களில் இதுவரை 50 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே காப்பீடு அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த நுண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதன்முறையாக 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு அளிக்கும் திட்டம் அறிமுகமானது.இந்தத் திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் பாலிசிகாலத்திற்குள் இறக்க நேர்ந்தால், காப்பீட்டுத் தொகையும், பாலிசி காலத்தை நிறைவு செய்யும் பாலிசிதாரர்களுக்கு முதிர்வு தொகையும் வழங்கப்படுகிறது. 18 முதல் 55 வயது வரை நல்ல உடல் நிலையில் உள்ளோருக்கு எந்தவித மருத்துவ பரிசோதனை இன்றி இந்த பாலிசி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 3 வருடங்கள் பிரீமியம் செலுத்தி காலாவதியான பாலிசிகளுக்கு 6 மாதத்திற்கும், 5 வருடங்கள் பிரீமியம் செலுத்திய பாலிசிகளுக்கு இரண்டு வருடத்திற்கும் தொடர் பாதுகாப்பு உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை