கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குடியரசு தலைவர், பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

தினகரன்  தினகரன்
கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : குடியரசு தலைவர், பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம்

புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற சபாநாயகரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறி முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 13ம் தேதியில் இருந்து கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தை தொடங்கினர். இவர்களை கண்டுகொள்ளாமல் நேற்று முன்தினம் ராஜ்நிவாசில் இருந்து கவர்னர் கிரண்பேடி வெளியேறி, சென்னை சென்றார். பின்னர், அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்வர், அமைச்சர்களை புறக்கணித்து வெளியேறியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் நேற்று மாலையில் ஆலோசனை நடத்தினார். இதுபற்றி நாராயணசாமி கூறுகையில், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் உண்ணாவிரதம், சிறை நிரப்பும்  போராட்டம் என போராட்டம் தீவிரப்படுத்தப்படவுள்ளது. இன்று மாலை 12 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், நாளை (17ம் தேதி) 30 தொகுதிகளில்  கருப்பு கொடி ஏற்றப்படும். 18ம் தேதி கிரண்பேடியை கண்டித்து குடியரசு  தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடக்க உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். 21ம்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 4-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக எம்.பி. கனிமொழிமுதலமைச்சர் நாராயணசாமியின் கோரிக்கை நியாயமானது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். மேலும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். திருநாவுக்கரசர்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுச்சேரி முதல்வரை அவமதிப்பது, மக்களை அவமதிப்பதற்கு சமம் - திருநாவுக்கரசர்டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் 3 நாட்களாக சாலையில் படுத்து போராடி வருகிறார், இது என்ன விதமான ஜனநாயகம் - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

மூலக்கதை