ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை

பாராமுல்லா: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. பாராமுல்லா அருகே பின்னர் கிராமத்தில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 அல்லது 3 பயங்கரவாதிகள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று அதிகாலையில் தெற்கு காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹெஃப் ஷெர்மல் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அங்கிருந்த பதுங்கு குழியும் அழிக்கப்பட்டது. பதுங்கு குழிகளில் அதிகளவில் ரேசன் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக பதுங்கு குழிகளில் நான்கைந்து தீவிரவாதிகள் நீண்ட காலத்திற்கு தங்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. பயங்கரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இன்று நடந்த என்கவுண்டரில் 6 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவருக்கு காயங்கள் ஏற்பட்டது.

மூலக்கதை