பிரியங்கா காந்தி நியமனத்தின் மூலம் தோல்வியை காங்கிரஸ் அறிவித்துள்ளது: மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சனம்

தினகரன்  தினகரன்
பிரியங்கா காந்தி நியமனத்தின் மூலம் தோல்வியை காங்கிரஸ் அறிவித்துள்ளது: மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சனம்

டெல்லி: பிரியங்கா காந்தி நியமனத்தின் மூலம், ராகுல் காந்தியின் தோல்வியை, காங்கிரஸ் கட்சியே அதிகாரபூர்வமாக அறிவித்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சனம் செய்துள்ளார். உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி நியமிட்கப்பட்டுள்ளார். சகோதரி பிரியங்கா காந்திக்கு உ.பி., காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராகுல் காந்தி வழங்கியுள்ளார். உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுநாள் வரை தாய் சோனியா மற்றும் சகோதரர் ராகுலுக்காக மட்டுமே பிரியங்கா தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதன் மூலம் பிரியங்கா நேரடி அரசியலில் நுழைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பிரியங்காவுக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மிக பலம் வாய்ந்த தலைவர் என்றும் உத்தரப்பிரதேசத்தில் முழு பலத்துடன் மக்களவை தேர்தலை சந்திப்போம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில் உத்திரப்பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, பிரியங்கா காந்தியை அதிகாரபூர்வமாக அறிவிந்திருந்தாலும், அவர்களது குடும்ப கம்பெனி எப்படி இயங்கும் என்பதை அனைவரும் அறிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூலக்கதை