'ககன்யான்' திட்டத்துக்கு விமானிகள் தேர்வு

தினமலர்  தினமலர்
ககன்யான் திட்டத்துக்கு விமானிகள் தேர்வு

புதுடில்லி, 'மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டத்தில், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் பெரும்பாலும் விமானிகளாக இருப்பர்' என, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' தெரிவித்துள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, ஆய்வு செய்யும், 'ககன்யான்' திட்டத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. முதல் கட்டமாக, 'ககன்யான்' விண்கலத்தை, 2020 மற்றும் 2021 ஆண்டுகளில், ஆளில்லாமல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின், டிச., 2021ல், 'ககன்யான்' மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்கிடையே, 'ககன்யான்' திட்டம் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்படுவோர், பெரும்பாலும் விமானிகளாகவே இருப்பர் என, இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ககன்யான் திட்டத்தின் மூலம், விண்வெளிக்கு அனுப்பும் வீரர்கள் தேர்வு நடந்து வருகிறது. அவர்கள் பெரும்பாலும் விமானிகளாகவே இருப்பர். இந்த தேர்வில், இந்திய விமானப் படை முக்கிய பங்காற்றும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலக்கதை