வேண்டுமா, வேண்டாமா, எடுபடாது! சபரிமலை விவகாரத்தில் கமல், 'தெளிவு'

தினமலர்  தினமலர்
வேண்டுமா, வேண்டாமா, எடுபடாது! சபரிமலை விவகாரத்தில் கமல், தெளிவு

சென்னை : ''சபரிமலை விவகாரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும். மக்கள் தீர்மானித்துவிட்டால், எதுவும் எடுபடாது,'' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: மக்கள், எந்தவொரு பிரச்னை என்றாலும், சென்னைக்கு தான் வர வேண்டும் என்ற அசவுகாரியம் இருக்க கூடாது. இதனால், நான்கு மண்டலங்களில், எங்களது அலுவலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டம் பற்றி தெரியும். ஆனால், அதுபற்றி முடிவு செய்யும் தருணம், இது கிடையாது. அந்த கூட்டத்தில் பங்கேற்க, எங்களுக்கு அழைப்பு வரவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நெருக்கமாக இருப்பதால், அழைப்பு வரவில்லை என்பது கிடையாது. எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதோ, அங்கு போய் விடுவேன்.

பிரதமர் சொல்லவது போல், கேரள அரசு மோசமாக நடப்பதாக சொல்லி விட முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவை பாதுகாக்க வேண்டியது,அரசின் கடமை. சபரிமலை, கேரளாவில் இல்லாமல், தமிழகத்தில் இருந்திருந்தாலும், அதை செய்ய, கடமைப்பட்டு இருப்போம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்தொடர்ந்து இருப்போம்.

சபரிமலை விவகாரத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை, மக்கள் தீர்மானிக்க வேண்டும். மக்கள் தீர்மானித்துவிட்டால், எதுவும் எடுபடாது. இவ்வாறு, அவர்கூறினார்.

மூலக்கதை