திருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கல் ஏழுமலையான் பார்வேட்டை உற்சவம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கல் ஏழுமலையான் பார்வேட்டை உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பார்வேட்டை உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாட்டுப் பொங்கல் பண்டிகையன்று மலையப்ப சுவாமி பார்வேட்டைக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த உற்சவம் நேற்று நடந்தது.

இதற்காக ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்தியான மலையப்பசாமி சங்கு, சக்கரம், கதை, கத்தி, ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் விஷ்வ சேனாதிபதியுடன் பாபவிநாசம் செல்லும் சாலையில் உள்ள பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்றார். அங்கு, மலையப்பசுவாமி மான் ஒன்றை வேட்டையாடுவது போன்று அர்ச்சகர்கள் மூன்று முறை ஈட்டியை வனத்தில் எய்தினர்.

பின்னர், பார்வேட்டை மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

.

மூலக்கதை