பிளாஸ்டிக் தடையால் ஓட்டல் உணவு விலை உயர்வு

தினமலர்  தினமலர்
பிளாஸ்டிக் தடையால் ஓட்டல் உணவு விலை உயர்வு

சென்னை: பிளாஸ்டிக் தடையை காரணம் காட்டி, ஓட்டல்களில், உணவு வகைகளின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு வருவதால், மக்கள், சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தமிழகத்தில், உணவு துறையின் கீழ், விலை கண்காணிப்பு குழு உள்ளது. உணவு துறை அமைச்சர் தலைமையில் செயல்படும் அந்த குழுவில், நிதி, வேளாண், கூட்டுறவு உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் உள்ளனர். விலை கண்காணிப்பு குழு, அரிசி, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை தடுக்கும் பணியில் ஈடுபடுகிறது. இதற்காக, அத்தியாவசிய பொருட்களின் வரத்தை கண்காணித்து, பதுக்கலை தடுத்து, அவற்றின் விலை, செயற்கையாக உயர்த்தப்படுவது தடுக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க, இம்மாதம், 1ல் இருந்து, ஒரு முறை பயன்படுத்தும், 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு, தமிழக அரசு, தடை விதித்தது. இதனால், ஓட்டல்களில், உணவு வகைகள் வழங்க, பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில், வாழை இலை, காகிதம் உள்ளிட்ட மாற்று பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை காரணம் காட்டி, சாதாரணம், நடுத்தரம், உயர்தரம் என, அனைத்து வகை ஓட்டல்களிலும், உணவு வகைகளின் விலை, 20 ரூபாய் முதல், 50 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

'பிளாஸ்டிக் தடையை காரணம் காட்டி, ஓட்டல்களில், விலை உயர்வை தடுக்க, விலை கண்காணிப்பு குழு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது' என, நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

மூலக்கதை