சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை : லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை : லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

திருவனந்தபுரம் : சபரிமலையில் இன்று மாலை மகர விளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி பல லட்சம் பக்தர்கள் அங்கு திரண்டுள்ளனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. சபரிமலையில் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த 30ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று மாலை நடக்கிறது. இதையொட்டி திருவாபரண ஊர்வலம் கடந்த 12ம் தேதி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்டது.

இன்று காலை 9 மணியளவில் திருவாபரண ஊர்வலம் நிலக்கல்லை அடைந்தது. நிலக்கல் மகாதேவர் கோயிலில் சிறிதுநேரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வைக்கப்பட்டது.

அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டது.

திருவனந்தபுரம் அட்டத்தோடு, ெகால்லமூழி, ஏட்டப்பட்டி, அப்பாச்சிமேடு, சபரிபீடம் வழியாக மாலை 5 மணியளவில் சரங்குத்தியை அடையும். அங்கு திருவாபரண ஊர்வலத்துக்கு வரவேற்பு அளிக்கப்படும்.

அதன்பின்னர் மாலை 6. 30 மணியளவில் சன்னிதானம் அடையும். பின்னர் ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும்.

இந்த சமயத்தில் தான் பொன்னம்பல மேட்டில் 3 முறை மகரவிளக்கு தெரியும். மகரவிளக்கு பஜையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்றும் இன்றுமாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

இவர்கள் மகர ஜோதியை தரிசிப்பதற்காக ஆங்காங்ேக குடில் கட்டி தங்கி உள்ளனர்.


.

மூலக்கதை