தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி

தினகரன்  தினகரன்
தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை, இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் தொடர்பு கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவிஐபிக்களின் பயணத்துக்காக அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்கும் ஒப்பந்தத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தரகராக செயல்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல், துபாயில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார். அவரிடம் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தின. தற்போது, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து பேச, டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகள், வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டனர். இதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக, வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் நேற்று தெரிவித்தார்.

மூலக்கதை