என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா

தினமலர்  தினமலர்
என்.எஸ்.இ தலைவர் அசோக் சாவ்லா ராஜினாமா

புதுடில்லி: தேசிய பங்கு சந்தை தலைவர் அசோக் சாவ்லா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்
என்.எஸ்.இ., எனப்படும் தேசிய பங்குச் சந்தையின் தலைவராக கடந்த 2016-ம் ஆண்டு Tநியமிக்கப்பட்டவர், அசோக் சாவ்லா, 65. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர். நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணங்களை அவர் வெளியிடவில்லை.
ஏர்செல்- மேக்சிஸ் நிறுவனங்களுக்கிடையே நடந்த பண பரிவர்த்தனையில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான குழுவின் அனுமதி பெறாமல் நடந்ததாக காங். மூத்த தலைவர் சிதம்பரம், இவரது மகன் கார்த்தி ஆகியோர் மீதான வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையில் என்.எஸ்.இ.யை விசாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்தது. இந்த விவகாரம் காரணமாகவே அசோக் சாவ்லா பதவி விலக காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மூலக்கதை