இரட்டை இலை சின்னம் வழக்கு 16ல் விசாரணை

தினகரன்  தினகரன்
இரட்டை இலை சின்னம் வழக்கு 16ல் விசாரணை

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தலைமையிலான மதுசூதனன் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து,  டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில், டிடிவி.தினகரன், சசிகலா, எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன், செம்மலை மற்றும் தேர்தல் ஆணையம் என அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து விட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி, சங்கீதா டிங்கிரி சேகல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. பின்னர், விசாரணையை வரும் 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து விட்டதால், இந்த வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மூலக்கதை