5 வயதுக்கு குறைவான 6.71 கோடி குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகள்- மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
5 வயதுக்கு குறைவான 6.71 கோடி குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகள் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்!

5 வயதுக்கு குறைவான 6.71 கோடி குழந்தைகளுக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசியதாவது:

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகை 121,08,54,977 ஆகும். நவம்பர் 30, 2018 வரையில் இந்திய தனித்துவ அடையாள  ஆணையம் (யுஐடிஏஐ) 122.90 கோடி ஆதார் கார்டுகளை வழங்கி உள்ளது .

மேலும் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 6.71 கோடி ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது.  5 வயது முதல் 18 வயது வரையிலான மக்களுக்கு  29.02 கோடி கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. 

2011-ம்  ஆண்டு, கணக்கெடுப்பின் படி ஒரு வருடத்திற்குள் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2,08,98,228 ஆகும். எஸ்ஆர்எஸ் சமீபத்திய தகவல்கள் படி 2016-ம் ஆண்டிற்கான பிறப்பு விகிதம் 20.4 ஆகவும், இறப்பு விகிதம் 6.4 ஆகவும்  உள்ளது.

எஸ்ஆர்எஸ், நாடெங்கிலும் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புறத் தொகுதிகள் அடிப்படையில் தொடர்ச்சியான ஆய்வு பணியை மேற்கொள்கிறது. 

இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை