இந்திய ராணுவத்தில் நவீன தொழில்நுட்பம்- ரோபோக்களை புகுத்த திட்டம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இந்திய ராணுவத்தை மேலும் பலப்படுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க ராணுவத்தில் புதிய நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவுத்திறன் ஆகியவற்றை புகுத்த திட்டமிடபட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய தாக்குதல்களையும், தீவிரவாத ஊடுருவல்களையும் ஊக்குவித்து வருகிறது. இது தவிர டோக்லாம் பகுதியில் சீனா தனது படைகளை அவ்வப்போது குவித்து இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது.

எல்லைகளைப் பாதுகாக்க இந்தியா பல்வேறு முறைகளை கையாண்டாலும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலும், தாக்குதல்களும் தொடர்வதால் அவற்றைச் சமாளிக்க ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும், ரோபோக்கள் இணைந்த குழுவை உருவாக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

ராணுவத்தை மேலும் நவீனப்படுத்துவதன் மூலம் பலத்தை அதிகரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய போர் யுக்திகளை கையாள திட்டம் தீட்டியுள்ளது. போர்களில் வெற்றி பெறவும், உயிரிழப்புக்களை பெருமளவு தவிர்க்கவும் செயற்கை நுண்ணறிவு திறன், ரோபோடிக்ஸ், மைக்ரோ செயற்கைகோள்கள் போன்ற தொழில்நுட்பங்கள் ராணுவத்தில் கொண்டு வரப்பட உள்ளன. தேவை அடிப்படையில் படிப்படியாக இவை ராணுவத்தில் சேர்க்கப்படும் என இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.

மூலக்கதை