99% பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
99% பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

மும்பை: மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் கல்யாணில் 2 மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இத்துடன் ரூ.41 ஆயிரம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மற்றும் வீட்டு வசதி திட்டப்பணிகளையும் தொடங்கி வைத்தார். முன்னதாக மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். முன்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அதாவது; சாமானிய மக்கள் பயன்படுத்தும் 99% பொருட்கள் மற்றும் சேவைகளை 18 சதவீத வரி பிரிவிற்க்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிக அளவாக இருக்கும் 28 சதவீத வரி பிரிவில் ஆடம்பர பொருட்கள் மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் கூறினார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதற்கு முன்னர் 65 லட்சம் நிறுவனங்கள் மட்மே பதிவு செய்திருந்தன. ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கையில் 55 லட்சம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்கள் உள்ளிட்ட, 99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களுக்கு மிகவும் சுமூகமான முறையாக ஜிஎஸ்டி முறையை மாற்ற வேண்டும் என்பதே அரசின் கருத்து. பல ஆண்டுகளாகவே நாட்டிற்கு ஜிஎஸ்டி முறை தேவையாக இருந்தது. இதை அமல்படுத்தியதன் மூலம் வர்த்தகச் சந்தையில் இருந்தமுரண்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. பொருளாதாரமும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாறியிருக்கிறது. புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

மூலக்கதை