சபரிமலை தொடர்பாக 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: எதிர்கட்சினர் கடும் எதிர்ப்பு

தினகரன்  தினகரன்
சபரிமலை தொடர்பாக 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி: எதிர்கட்சினர் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்வது தொடர்பாக 10 லட்சம் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி பெண்கள் சுவர் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். 2019 ஜனவரி 1-ம் தேதி அன்று காசிகோடு முதல் திருவனந்தபுரம் வரை 10 லட்சம் பெண்கள் சுவர்போன்று நின்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதற்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியினரும் இது தொடர்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெண்கள் சுவர் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பெண்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தால் அந்த நிகழ்ச்சி தடுக்கப்படும் என்று பாஜ மாநில பொதுச் செயலாளர் கே. சுரேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே நிலக்கல் ,பம்பை, பத்தனம்தட்டா, சன்னிதானம் ஆகிய இடங்களில் 144 தடை உத்தரவு இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை