63வது பிறந்தநாள் பாரிக்கருக்கு மோடி வாழ்த்து

தினகரன்  தினகரன்
63வது பிறந்தநாள் பாரிக்கருக்கு மோடி வாழ்த்து

பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் சிகிச்சை பெற்ற அவர், தற்போது கோவா தலைநகர் பனாஜி அருகேயுள்ள டோனா பவுலாவில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இவருக்கு நேற்று 63வது பிறந்தநாள். இருப்பினும், அவர் தனது பிறந்தநாளை பொதுமக்கள் முன்னிலையில் கொண்டாடவில்லை. அவருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கோவா முதல்வரும் எனது நண்பருமான பாரிக்கருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடின உழைப்பாளியான அவர் கோவா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். அவரது பிறந்ததினத்தில் இந்த நாடே அவரது உடல் நலத்திற்காக பிரார்த்தனை செய்கிறது’ என கூறியுள்ளார். பாரிக்கரின் பிறந்தநாளை யொட்டி அவரது குடும்பத்தினர், பாஜ.வினர், நலன் விரும்பிகள் பனாஜியில் உள்ள மகாலட்சுமி கோயிலில் வழிபாடு நடத்தினர்.

மூலக்கதை