மாயாவதி ஆதரவால் ம.பி.யில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்

தினகரன்  தினகரன்
மாயாவதி ஆதரவால் ம.பி.யில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்

டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் காங்கிரஸ் ஆட்சியமைக்க மேலும் 2 இடங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. மாயாவதி ஆதரவுஇதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது: பட்டியல் இன மக்களுக்கு எதிராக பாஜக செயல்படுவதால் காங்கிரஸ் கட்சிக்கு எங்களது ஆதரவை அளிக்கிறோம். ஆட்சி அமைக்க எந்த உரிமையுமின்றி பாஜக உரிமை கோருவது வேடிக்கையாக உள்ளது. மபியில் பாஜக ஆட்சி அமையக்கூடாது என்பதே எங்களது குறிக்கோள். தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் ஆதரவளிக்க தயார். ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புபகுஜன் சமாஜ் ஆதரவளித்ததையடுத்து மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க  காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் ஆனந்தி பென் படேல் அழைப்பு விடுத்துள்ளார். இதனையயடுத்து இன்று பகல் 12 மணிக்கு ஆட்சியமைக்க உரிமைகோரி காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்திக்க உள்ளனர். காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியானதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள அக்கட்சி தொண்டர்க;ள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.

மூலக்கதை