மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை : முதல்வர் சித்தராமையா விளக்கம்

தினகரன்  தினகரன்

பெங்களூரு : ‘‘மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது’’ என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக  மேலவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மஜத உறுப்பினர் கண்ட கவுடா பேசுகையில், ‘‘காவிரி நீர் பங்கீடு  விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக  அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக கட்சிகள்  கூறுகிற நிலையில், மாநில அரசின் நிலைப்பாடு என்ன என்பதையும், மேகதாது அணை   எப்போது கட்டப்படும் என்பது குறித்தும் முதல்வர் சித்தராமையா விளக்கம்  அளிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.இதற்கு சித்தராமையா அளித்த பதிலில் கூறியதாவது: காவிரி  நீர் பங்கீடு விஷயத்தில் இறுதி தீர்ப்பு வந்துள்ளது. தமிழ்நாட்டின்  நிலத்தடி நீர் மட்டத்தை கருத்தில் கொள்ளவேண்டு–்ம் என நாம் வாதாடியதால்  நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. மேகதாது அணை  விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது. மேகதாதுவில் நாம் அணை கட்டினால்  தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை