58 மாநிலங்களவை எம்பி பதவிக்கு மார்ச் 23ல் தேர்தல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி :  மாநிலங்களவைக்கு 58 உறுப்பினர்களை ேதர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் 16 மாநிலங்களை சேர்ந்த 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான், ஜேபி நட்டா, தாவர்சந்த் கெலாட், ராம்தாஸ் அதவாலே ஆகியோரும் அடங்குவர். இது தவிர கேரளாவில் இருந்து மாநிலங்களவை எம்பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்த வீரேந்திர குமார் கடந்த டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்பவும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,` காலியாக உள்ள 58 மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் மார்ச் 23ம் தேதி நடைபெறும்’ என தெரிவித்துள்ளது.

மூலக்கதை