ஸ்ரீவி., ஜீயருக்கு கொலை மிரட்டல்

தினமலர்  தினமலர்
ஸ்ரீவி., ஜீயருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீவில்லிபுத்துார் : வைரமுத்துவிற்கு எதிராக போராடிய ஜீயருக்கு, கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்துவிற்கு எதிராக போராடிய ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயருக்கு, மிரட்டல் கடிதம் வந்துள்ளது. திருச்சி பாலக்கரை, டாக்டர் அம்பேத்கர், பெரியார் தலித் கூட்டமைப்பு என்ற அமைப்பின் ராஜேந்திரன் பெயரில் வந்துள்ள ஆபாச வார்த்தைகளால் எழுதப்பட்டுள்ள இக்கடிதத்தில், 'வைரமுத்துவிற்கு எதிராக போராடிய ஜீயர், பெரியாருக்கு எதிராக கூறியிருந்தால் கொலை செய்திருப்போம்,' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூலக்கதை