'வலுவான காரணமின்றி வழக்கை விசாரிக்க முடியாது'

தினமலர்  தினமலர்
வலுவான காரணமின்றி வழக்கை விசாரிக்க முடியாது

புதுடில்லி : மும்பையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரும், 'அபினவ் பாரத்' அமைப்பின் நிர்வாகியுமான, பங்கஜ் பட்னிஸ், தேசத் தந்தை, மஹாத்மா காந்தி படுகொலை வழக்கை, மீண்டும் விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை பரிசீலித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.ஏ.பாப்டே, நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு கூறியதாவது: வழக்கில் தொடர்பு உள்ளவரின் தகுதி அடிப்படையில், வழக்கை நடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்க முடியாது; சட்டப்படி அவசியம் இருந்தால் மட்டுமே, வழக்கை விசாரிக்க முடியும்.

மஹாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டு, பல ஆண்டுகள் கடந்த பின், மிகுந்த தாமதத்துடன், தற்போது மனு தாக்கல் செய்யப்படுகிறது. அளவு கடந்த தாமதத்தால், வழக்கு தொடர்பான ஒவ்வொரு முக்கிய ஆதாரமும் கிடைக்க வழி இல்லாமல் போகிறது. தவிர, இந்த வழக்கை விசாரிக்க வேண்டிய வலுவான காரணம் இருக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை ஏற்பதற்கு வலுவான காரணங்களை மனுதாரர், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

மூலக்கதை