மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேற முடிவு: ஆதித்யா தாக்கரே தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகாராஷ்டிராவில் பாஜ கூட்டணியிலிருந்து சிவசேனா வெளியேற முடிவு: ஆதித்யா தாக்கரே தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு வருடத்திற்குள் பா. ஜ. கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறும் என அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே கூறினார்.

மகாராஷ்டிராவில் பா. ஜ. -சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

முதல்வராக பா. ஜ. வின் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். சமீப காலமாக பா. ஜ. வை சிவசேனா விமர்சித்து வருகிறது.

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தது. மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவ்வப்போது பாராட்டியும் வருகிறது.



இந்நிலையில் அகமத்நகரில் நடந்த சிவசேனா நிர்வாகிகள் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே பேசியது,
இன்னும் ஒரு வருடத்திற்குள் மகாராஷ்டிராவில் பா. ஜ கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறும். அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது சிவசேனா கட்சி மட்டும் தான்.

இதற்கான இறுதி முடிவை தலைவர் உத்தவ் எடுத்துள்ளார். அதற்காக சிவசேனா கட்சியினர் ஒன்றிணைந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதித்யா பேசினார்.

.

மூலக்கதை