இடைத்தேர்தலில் போட்டியா?: சரத் யாதவ் மறுப்பு

தினமலர்  தினமலர்
இடைத்தேர்தலில் போட்டியா?: சரத் யாதவ் மறுப்பு

புதுடில்லி: காலியாக உள்ள மூன்று லோக்சபா இடைத்தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை என சரத்யாதவ் கூறினார்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தனது கூட்டணியை மாற்றியதால் ஐக்கிய ஜனதா தள கட்சியின் அதிருப்தி தலைவரான சரத்யாதவ், அலி அன்சாரி ஆகியோர் கட்சியை விட்டு விலகினர். இருவரின் ராஜ்யசபா எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு.

இந்நிலையில் உ.பி.யில் க்ராக்பூர், பகல்பூர், மற்றும் ராஜஸ்தானில் அல்வார் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளும் காலியாகின்றன. இத்தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் சரத்யாதவ் தனது ஆதரவாளர்களை நிறுத்தி போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாயின.இதனை சரத்யாதவ் மறுத்தார். அவர் கூறுகையில், மூன்று தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ஊடகங்கள் தான் செய்தி வெளியிடுகின்றன. அதில் உண்மையில்லை. இப்போதைக்கு போட்டியிடும் திட்டமில்லை என்றார்.

மூலக்கதை