‛மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்': மன்மோகன் சிங்

தினமலர்  தினமலர்
‛மோடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்கணும்: மன்மோகன் சிங்

புதுடில்லி: தன் மீது வீண் பழி சுமத்தும் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பேசியுள்ளார்.

ரகசிய சதி?


குஜராத் சட்டசபை தேர்தலில் பாக்., தலையீடு இருப்பதாகவும் இதன் பின்னணியில் காங்., கட்சியும் அதன் மூத்த தலைவர் மன்மோகன்சிங் ஆகியோரும் செயல்படுவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்திருந்தார். மேலும் மணிசங்கர் அய்யர் வீட்டில் பாக்., தூதர், ஹமீத் அன்சாரி மற்றும் மன்மோகன்சிங் கலந்து கொண்டு 3 மணி நேரத்திற்கும் மேலாக ரகசிய சதி ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் மோடி குற்றம் சாட்டினார்.

மன வேதனை:

இந்நிலையில் மன்மோகன்சிங் வீடியோ பதிவு ஒன்றில் தெரிவித்ததாவது: அரசியல் லாபத்துக்காக பிரதமர் மோடி வீண் பழி சுமத்துகிறார். குஜராத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் அவதூறு பரப்பி வருகிறார். இதனால் கடும் மன வேதனை அடைந்தேன். தனது பேச்சுக்காக மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பா.ஜ., பதிலடி

இதற்கு டுவிட்டரில் பதிலளித்த பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, இப்போதெல்லாம் அதிகம் கோபப்படும் மன்மோகன் சிங், அவர் ஆட்சியில் இருந்தபோது கோவப்படவில்லையே ஏன்? பிரதமரை காங்., தலைவர்கள் கடுமையாக விமர்சித்த போது மன்மோகன் சிங் எங்கே போனார்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை