தீவிரவாத தாக்குதலை விட சாலை பள்ளத்தால் பலியாவோர் அதிகம் : உச்ச நீதிமன்றம் வேதனை

தினகரன்  தினகரன்
தீவிரவாத தாக்குதலை விட சாலை பள்ளத்தால் பலியாவோர் அதிகம் : உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: தீவிரவாத தாக்குதலைக் காட்டிலும், குண்டும் குழி சாலைகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில், சாலை பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:குண்டும் குழியால் சாலைகளால் ஏற்படும் விபத்தில் சிக்கி மக்கள் பலரும் பரிதாபமாக இறக்கின்றனர். தீவிரவாத தாக்குதலைக் காட்டிலும் குண்டும் குழி சாலைகளால் ஏற்படும் விபத்தில் சிக்கி பலர் பலியாவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த சூழல் அச்சுறுத்தும் வகையில் உள்ளது. இது மனிதனின் வாழ்வா, சாவா சம்மந்தப்பட்ட முக்கிய பிரச்னையாகும். சாலை பள்ளத்தால் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் நஷ்ட ஈடு கோர உரிமை உண்டு. நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்ற கமிட்டி 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மூலக்கதை