தெலுங்குதேசம் எம்பி அமளி மாநிலங்களவை ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
தெலுங்குதேசம் எம்பி அமளி மாநிலங்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி : தெலுங்குதேசம் கட்சி எம்பி அமளியால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை நேற்று கூடியதும் முன்னாள் உறுப்பினர் கே.வி.ஆர்.எஸ். பாலசுப்பா ராவ் கடந்த மாதம் முதுமை காரணமாக மறைந்ததை முன்னிட்டு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி பற்றி மாநிலங்களவை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக, அந்த கட்சி எம்பி சி.எம். ரமேஷ் பிரச்னை எழுப்பினார். இதற்கு அவை தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி அளிக்கவில்லை. காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மாவை பேச அழைத்தார். இதனால் அதிருப்தி அடைந்த ரமேஷ், அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டார். தனது அறைக்கு வந்து புகார் அளிக்கும்படி வெங்கையா நாயுடு கூறியும் அவர் ஏற்கவில்லை. இதனால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது வெங்கையா நாயுடு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில்,’ மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத் மற்றும் தெலுங்கு தேசம் எம்பி ரமேஷ் ஆகியோர் எனது அறைக்கு வந்து ஒரு புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த விசாரணை முடிவுக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தார்.ஆதார் பாதுகாப்புஆதார் பாதுகாப்பு தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில், ‘‘ஆதார் தகவல்களை பாதுகாப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் யாராவது ஆதார் குறித்த தகவல்களை கேட்டால் பொதுமக்கள் அளிக்க வேண்டாம். ஆதார் தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஆராய நீதிபதி கிருஷ்ணா தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கமிட்டி அளிக்கும் அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். நல்ல நிர்வாகத்துக்கு ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. தனிநபர் ரகசியம் முக்கியம்தான். அதற்காக தீவிரவாதம், ஊழலை ஏற்க முடியாது. ஆதாருக்கு பதிலாக உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வசதி வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. இதற்காக 16 இலக்கம் கொண்ட தற்காலிக எண் (விஐடி) வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.பயோ கழிவறைமாநிலங்களவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் அளித்த பதிலில், ‘‘இந்தியாவில் ஓடும் அனைத்து வகையான ரயில்களிலும் பயோ கழிவறை பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக ரூ.1,220 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பணிகள் 2019ம் ஆண்டுக்குள் முடியும்’’ என்றார்.

மூலக்கதை