ரூ.27 கோடி ஹெராயின் பறிமுதல் பாஜ நிர்வாகி உட்பட 7 பேர் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.27 கோடி ஹெராயின் பறிமுதல் பாஜ நிர்வாகி உட்பட 7 பேர் கைது

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பால் போதை பொருள் தடுப்பு போலீசார், மாவட்ட பாஜ தலைவர்லூட்கோஷி உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 4. 59 கிலோ ஹேராயின், 28 கிலோ போதை மாத்திரைகள், 57. 18 லட்சம் ரூபாய், 95 ஆயிரம் ரூபாய் செல்லாத நோட்டுகள், இரண்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் இருந்த போதை பொருட்களின் மதிப்பு, 27 கோடி ரூபாய் இருக்கும். கைதான மற்றவர்களின் வீடுகளில் சோதனை நடத்திய போலீசார், போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த சூட்கேஸ்கள், போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட லூட்கோஷி, கடந்தாண்டு சண்டேல் கவுன்சிலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டு தேர்வு செய்யப்பட்டார். பின், பாஜ கட்சியில் சேர்ந்து சண்டேல் கவுன்சிலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.




.

மூலக்கதை