பாஜ-பிடிபி கூட்டணி முறிந்த நிலையில் காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜபிடிபி கூட்டணி முறிந்த நிலையில் காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி(பிடிபி)-பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிடிபிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜ வாபஸ் பெற்றது.

ஆட்சியில் தொடர பெரும்பான்மை இல்லாததால், முதல்வர் பதவியை மெகபூபா ராஜினாமா செய்தார். ஜனாதிபதி ஒப்புதலை அடுத்து, காஷ்மீரில் கவர்னர் ஆட்சி நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பாஜ தேசிய தலைவர் அமித்ஷா நாளை மறுதினம் காஷ்மீர் செல்கிறார்.

காஷ்மீரில் பாஜவின் செல்வாக்கை அதிகரிப்பது, வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார் செய்வது உள்ளிட்டவை குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.


.

மூலக்கதை