சாலையில் குப்பையை வீசியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மா

தினகரன்  தினகரன்
சாலையில் குப்பையை வீசியவரை கண்டித்த நடிகை அனுஷ்கா சர்மா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா சாலையில் குப்பையை வீசியவரை கண்டிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. தனது ஆடம்பரக் காரில் சென்றவாறு ஒருவர் சாலையில் குப்பையை தூக்கி வீசுவதைக் கண்ட நடிகை அனுஷ்கா சர்மா அவரை சாலையில் குப்பையை வீச வேண்டாம் என அறிவுறுத்தியதுடன், அந்த நபரைக் கண்டித்துள்ளார்.இந்த வீடியோ காட்சியை பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இதுபோன்ற நபர்களா நாட்டை தூய்மையாக வைத்திருக்கப் போகிறார்கள் என்று ஆவேசத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

மூலக்கதை