இணையவழி குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: 3-வது இடத்தில் இந்தியா

தினகரன்  தினகரன்
இணையவழி குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: 3வது இடத்தில் இந்தியா

டெல்லி: இணையவழி குற்றங்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில் இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான சேவையை அளித்து வரும் ஆர்.எஸ்.ஏ. நிறுவனம் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை நடத்திய ஆய்வில் எந்த நாட்டில் இணையதளம் சார்ந்த குற்றங்கள் அதிகம் நடைபெற்றுள்ளது என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இணையதள தகவல் திருட்டு, செல்போன்களில் வைரஸ் பரப்புவது, இணையதள நிதி மோசடி உள்ளிட்டவை பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளன. இதில் கனடா முதல் இடம், அமெரிக்கா இரண்டாம் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரேசில் நான்காவது இடத்திலும், நெதர்லாந்து (5 வது இடம்), கொலம்பியா (6 வது இடம்), ஸ்பெயின் (7 வது இடம்), மெக்சிகோ (8 வது இடம்), ஜெர்மனி (9 வது இடம்) மற்றும் தென் ஆப்ரிக்கா (10 வது இடம்) பெற்றுள்ளது.

மூலக்கதை