சாதரண விசயத்துக்கு கூட டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு மட்டும் மவுனம்

தினகரன்  தினகரன்
சாதரண விசயத்துக்கு கூட டிவிட்டரில் கருத்து தெரிவிக்கும் பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு மட்டும் மவுனம்

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க போராட்டக்காரர்கள் சென்ற போது கலவரம் ஏற்பட்டது. இதனை அடுத்து போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் நடக்கும் சம்பவங்களுக்கு கூட உடனுக்குடன் கருத்து தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி துப்பாக்கிச்சூடு நடைபெற்று 2 நாட்கள் கடந்த நிலையிலும் எந்த ஒரு கருத்தையும், அனுதாபத்தையும் தெரிவிக்காமல் இருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சில நாட்களுக்கு முன் டெஸ்சாஸில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டார். தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு கலவரம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்காமல், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வெளியிட்ட உடற்தகுதி வீடியோவை பார்த்த பிரதமர் மோடி அந்த சவாலை ஏற்று கொண்டார். தான் விரைவில் உடற்தகுதி வீடியோவை வெளியிடுவதாக கூறினார். இது குறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆலை அமைப்பது தொடர்பாக உள்ளூர் மக்கள் கருத்தை கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளது. மக்களுடன் பேச கூட பிரதமருக்கு நேரம் இல்லையா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மூலக்கதை