பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும்: சிதம்பரம்

தினமலர்  தினமலர்
பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும்: சிதம்பரம்

புதுடில்லி : மத்திய அரசால் பெட்ரோல் விலையை 25 ரூபாய் வரை குறைக்க முடியும் என மாஜி நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோது, பெட்ரோல் விலையில், லிட்டருக்கு, 15 ரூபாய் வரை, மத்திய அரசு சேமித்தது. அதன் மீது, கூடுதலாக, 10 ரூபாய் வரிவிதித்து, லாபம் சம்பாதித்து வருகிறது. மத்திய அரசு மனது வைத்தால், பெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும்.

ஆனால் மத்திய அரசு அதனை செய்யாமல் லிட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் குறைப்பதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை