குமாரசாமி புதன்கிழமை பதவியேற்பு

தினமலர்  தினமலர்
குமாரசாமி புதன்கிழமை பதவியேற்பு

பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வாரக மதசார்பற்ற ஜனதாதளத்தின் குமாரசாமி, வரும் புதன்கிழமை பதவியேற்க உள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வர் எடியூரப்பா விற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் தனது பதவியை, ( 19ம் தேதி) ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து கவர்னர், காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் சார்பிலான குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து குமாரசாமி, முதல்வராக பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

தேதி மாற்றம் :

நாளை ( 21ம் தேதி) முதல்வர் பதவியேற்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 21ம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜிவின் நினைவுநாளையொட்டி முதல்வர் பதவியேற்பு 23ம் தேதி (புதன்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல், மம்தா பங்கேற்பு :

முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் , மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமாரசாமிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் , உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துளனர்.

மூலக்கதை