மாணவர்களே உஷார்... 24 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிட்டது யுஜிசி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதாக கூறி, அவற்றின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் பல்வேறு பகுதிகளில் 24 பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக, அங்கீகாரம் பெறாமல், யுஜிசி விதிகளை மீறி செயல்படுகின்றன. இந்த பல்கலைக்கழகங்கள் போலியானவை. இவை பட்டம் வழங்குவதற்கு எந்த உரிமையும் இல்லை. டெல்லியில் 8 பல்கலைக்கழகங்கள் போலியானவை.புதுச்சேரி, அலிகார், பீகார், ரவுர்கேளா, ஒடிசா, கான்பூர், பிரதாப்கர், மதுரா, கான்பூர், நாக்பூர், கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய இடங்களில் தலா ஒன்று மற்றும் அலகாபாத்தில் இரு பல்கலைக்கழகங்கள் போலியானவை என தெரியவந்துள்ளன. இந்த பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை